பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2019

சவுதியில் 49 இலங்கைப் பெண்கள் தடுத்து வைப்பு

சவுதி அரேபிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நலன்புரிய நிலையங்களில், சுமார் 49 இலங்கைப் பணிப்பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சவுதியிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான விமானச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வரை, 21 பெண்கள் காத்திருப்பதாகவும் நிலுவைச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, 14 பேர், காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நலன்புரிய நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட 9 பெண்களும் நீதிமன்ற வழக்குகளுக்கு ஆஜர்படுத்தப்படலுவுள்ள 5 பெண்களும் இதில் உள்ளடக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது