பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2019

பிரான்சில் காணாமல்போன மிராஜ்! போர்விமானத்தின் கதி தெரியவில்லை!!

பிரான்ஸில் மிராஜ் 2000-டி ரக போர் விமானமொன்றுஇன்று திடிரென வானில் இரண்டு விமானிகளுடன் காணாமல் போயுள்ளது. சுவிஸ் எல்லையிலுள்ளவிமானப்படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் திடிரென தனது வானொலி தொடர்புகளை இழந்ததுடன் முற்பகல் 11மணியளவில் ரேடார் திரையில் இருந்து மறைந்துள்ளது.

இந்தவிமானம் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம்என அஞ்சப்படுகிறது. இதில் பயணித்த இரண்டு விமானிகளுக்கு ஏற்பட்ட கதை தெரியவில்லை. மலைப்பகுதியானஇந்த இடத்தில் கடும்குளிரும் பனிப்பொழிவும் நிலவுவதால் மீட்புப்பணிகளில் சவால்நிலைஇருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் ஆயுதங்கள் எவையும் பொருத்தப்பட்டிருக்கவில்லையெனஅறிவிக்கப்பட்டுள்ளது