பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2019

டாலை வென்று சம்பியனானார் ஜோக்கோவிச்

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி நாளான இன்று, உலகின் முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் சம்பியனானார்.

உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடாலை எதிர்கொண்ட சேர்பியாவின் ஜோக்கோவிச், 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில் உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவாவை எதிர்கொண்ட உலகின் நான்காம்நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா, 7-6 (7-2), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் சம்பியனாகியிருந்தார்.