பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2019

வாள் வெட்டுக் குழுவினரை மடக்கிப் பிடித்தனர் கொக்குவில் மக்கள்!

யாழ் கொக்குவில் பகுதியில் வன்முறையில் ஈடுபடும் நோக்கோடு வாள்களுடன் உந்துருளியில் வந்த இளைஞர்கள் குழுவை ஊர் மக்கள் விரட்டி அடித்ததோடு அவர்களில் நால்வரை மடக்கிப் பிடித்துள்ளனர். அத்துடன் 7 உந்துருளிகளையும் கையகப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஆங்கிலப் புத்தாண்டாகிய இன்று முற்பகல் கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையம் முன்பாக நடந்துள்ளது.

சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் 90 பேர் கொண்ட குழு, வாள்களுடன் வருகை தந்ததை அவதானித்த சிலர் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டதாக அங்கிருந்து கிடைக்குக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் ஒன்று சேர்ந்து நையப்புடைக்கப்படவுள்ளளோம் என்பதை உணர்ந்த இளைஞர் குழு நாலா பக்கமும் சிதறி தப்பியோடியுள்ளனர். எனினும் அவர்களில் 4 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் அக்குழுவைச் சேர்ந்த 7 உந்துருளிகளும் மீட்கப்பட்டன.

பிடிக்கப்பட்ட நான்கு இளைஞர்களையும் உந்துருளிகளையும் மக்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.