பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜன., 2019

இரணைமடு குடிதண்ணீர் விவகாரம்; சிறிதரனுடன் ஆளுநர் பேச்சு

கிளிநொச்சிக்குப் பயணம் செய்த வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்று முன் தினம் இரவு அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.



இந்தக் கலந்துரையாடலின்போது செயலிழந்து காணப்படுகின்ற குறிஞ்சாத்தீவு உப்பளம், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் போன்ற தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், விவசாயிகளுடைய நலன்களில் அக்கறை செலுத்துதல் மற்றும் விவசாயப் பண்ணைகளை விடுவித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர், நீர்ப்பாசனத் திட்டத்திலேயே தமிழ் மக்களின் ஒற்றுமை தொடர்பில் ஒரு சுமுகமான முடிவு பெறவேண்டும். அதற்கான முன் யோசனைகள் பற்றியும் நான் கேட்டிருக்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் கேட்டுள்ளோம். மழை நீரை நம்பிஇருக்கின்ற தமிழ்ம் மக்களுக்கு இது சாதகமாக அமையவேண்டும் என்பதுதான் என்னுடைய முடிவாகும். அது போலவே அவருடைய முடிவும் அதுவாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்-என்றார்.