பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2019

படையினர் வசம் இருந்த மூன்று விவசாய பண்ணைகள் விடுவிப்பு

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வடக்கில் படையினர் வசம் உள்ள ஒருதொகுதி காணிகளை மைதிரிபால சிறீசேனா விடுவிக்கவுள்ளார்



இதன்போது கடந்த பத்துஆண்டுகளாக படையினர் அபகரித்து வளங்களை அனுபவித்து அதன் ஊடாக அதிகளவான வருமானத்தை பெற்று வந்த நிலையில் அதன் வருமானங்களை மக்கள் கடந்த பத்து ஆண்டுகளாக பெற்றுக்கொள்ளவில்லை
நாச்சிக்குடா பகுதியில் உள்ள விவசாய பண்ணை,வெள்ளாங்களம் பகுதியில் உள்ள விவசாயபண்ணை,உடையார்கட்டு குளத்தின் கீழ் அமைந்துள்ள விவசாய பண்ணை என்பனவற்றை இன்று விடுவிக்கப்படவுள்ளது.

இந்த பண்ணைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக பாரியளவில் படையினர் தோட்டங்கள் செய்து வருமானத்தினை பெற்றுக்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.