பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2019

தமிழ் மக்கள் கூட்டணியில் நியமிக்கப்பட்டவர்களின் விபரம்


தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனும் உப செயலாளராகவும் பொருளாளராகவும் பேராசிரியர் வீ.பீ.சிவநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு கட்சியின்ப உப செயலாளர்கள் இளைஞரணி மற்றும் மகளிர் அணி மற்றும் சர்வதேச இசைப்பாளர்களும் துறை ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும், தொகுதி ரீதியாகவும் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பலரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது மத்திய குழுக் கூட்டம் யாழ்ப்பாணம் நல்லூரடியிலுள்ள முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று காலை நடைபெற்றது.

அதன் போதே கட்சியின் நிர்வாக குழு உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்