பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2019

ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை முன்வையுங்கள் - மாவை

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பதாக நாங்கள் இதுவரையில் அறிந்திருக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் சிக்கல் நிலைக்கு தீர்வுகாணப்பட்ட பின்னர், தற்போது எதிர்க்கட்சிப் பதவி தொடர்பில் சர்ச்சைகள் தொடர்ந்துவரும் நிலையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி பின்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

பாராளுமன்றத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பலர் அங்கத்துவம் வகிக்கின்றனர். அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படக் கூடாது, உண்மைகள் வெளிப்படுத்தப்படக் கூடாது என்பதாலேயே எதிர்கட்சி பதவியை விட்டுக்கொடுப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை என சிசிர ஜயகொடி எம்.பி. தெரிவித்த கருத்து தொடர்பில்அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.