பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2019

ஹொப்மன் கிண்ணத்தை வென்றது சுவிற்ஸர்லாந்து

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுவந்த ஹொப்மன் கிண்ணத் தொடரில், நடப்புச் சம்பியன்களான சுவிற்ஸர்லாந்து நேற்று சம்பியனாகி ஹொப்மன் கிண்ணத்தை தக்கவைத்துள்ளது.

இறுதிப் போட்டியின் முதற்போட்டியில் ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்ற சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், சுவிற்ஸர்லாந்துக்கு ஆரம்ப முன்னிலையை வழங்கியிருந்தபோதும் ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்களில் சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை வென்று 1-1 என சமப்படுத்தியிருந்தார்.

எனினும் தீர்மானமிக்க கலப்பு இரட்டையர் போட்டியில் 4-0, 1-4, 4-3 (5-4) என்ற செட் கணக்கில் கேர்பரையும் ஸவ்ரேவ்வையும் வென்ற பெடரரும் பென்சிச்சும் 2-1 என ஹொப்மன் கிண்ணத்தை வென்றனர்.