பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2019

ஆளுனர் நியமன விவகாரம்!

கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா ஆளுனர் அதிகாரங்களை தனக்கும் முஸ்லிம் மக்களுக்கும் சார்பாக பயன்படுத்தும் வகையில் செயற்படக்கூடும் எனத் தெரிவித்து தமிழ் உணர்வாளர் அமைப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் உணர்வாளர் அமைப்பு தெரிவித்துள்ளதாவது,

பொருத்தமில்லாத ஒருவர் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் உணர்வாளர் அமைப்பு எதிர்ப்பினை வெளியிடுகின்றது.

ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுனராக நியமித்துள்ளமையின் காரணமாக தமிழ் மக்களிடையே பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்துவதற்காக எதிர்வரும் 25 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் ஹர்த்தால் முன்னெடுக்கபடவுள்ளது.