பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2019

வேலணை பிரதேச சபை  தவிசாளரின் (ஈ பி டி பி கருணாகரன் )   நிர்வாக சீர்கேடு அம்பலம்

நேற்றைய தினம் ஐந்து சந்தி பகுதியிலிருந்து தீவுப்பகுதியில் சட்டவிரோதமாக இரும்பு சேகரிக்க வந்த வந்த வாகனத்தின் நிலையே இது . குடித்துவிட்டு மிகவேகமாக ஓடி அல்லைப்பிட்டி பகுதியில் வாகனத்தை புரட்டியுள்ளார் சாரதி .
பிரதேச சபையில் சட்டவிரோத இரும்பு வியாபாரம் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தெரியப்படுத்தி ஏன் இவர்களை மண்டைதீவு சோதனை சாவடியிலே திருப்பியனுப்பவில்லையென்று ஊர்காவற்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தீவுப்பகுதி  தமிழரசுக்கட்சி அமைப்பாளர்  குணாளன் அவர்கள்  கேட்டபோது தமக்கு இன்னமும் இரும்பு வாகனங்களை தடுத்து நிறுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் , கடிதங்கள் வேலணை பிரதேச சபையினரால் வழங்கப்படவில்லையென்றும் பிரேரணை நிறைவேற்றம் குறித்து தாம் தற்போதுதான் அறிவதாகவும் கூறினார் .

இரும்பு சேகரிக்கும் போர்வையில் தீவுக்குள் வருபவர்கள் பலதரப்பட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு செல்கின்றனர் . மேலும் இங்கே இரும்புகளென்று பெரிதாக ஏதுமில்லை . மதுபாவனைக்கு அடிமையானவர்கள் ஆட்களில்லாத வீடுகளை உடைத்தே இவர்களுக்கு இரும்புகளை வழங்குகின்றனர் . ஆகவே இந்த சட்டவிரோத வியாபாரம் தடைசெய்யப்படவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பிரதேச சபையில் பிரேரணை முன்வைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையிலும் தினமும் சட்டவிரோத இரும்பு வியாபாரிகள் வந்து செல்கின்றமையானது வேலணை பிரதேச சபை தவிசாளரின் கையாலாகத்தனமே !! தவிசாளராக கடைமையாற்றுவதற்கு தகுதியற்றவெரென்று அவரது கட்சி சார்ந்த உறுப்பினர்களே தொடர்ச்சியாக சபையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இது சம்பந்தமாக  நடவடிக்கை  எடுக்கும்படி  தீவுப்பகுதி  தமிழரசுக்கட்சி அமைப்பாளர்  குணாளன் அவர்கள்