தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்!
கனடாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளும் நிதி திரட்டலும் கடந்த சில ஆண்டுகளாக நடந்தன.
அப்படி அமையவுள்ள தமிழ் இருக்கைக்கான தமிழ்தாய் வாழ்த்துப்பாடலுக்கு திரைப்பட இசை அமைப்பாளர் இமான் இசையமைக்க உள்ளார். அத்துடன் கனடா தமிழ் காங்கிரஸ் சார்பில் இமானுக்கு, `மாற்றத்திற்கான தலைவர் விருது' வழங்கப்பட்டுள்ளது.