பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2019

மதுஷ் உள்ளிட்ட 39 பேர் டுபாய் நீதிமன்றில் ஆஜர்

டுபாயில் வைத்து கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட இலங்கையின் பாதாளக் குழுவொன்றின் தலைவரும் பிரபல போதை வர்த்தகருமான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 39 சந்தேகநபர்கள் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுபாயில் உள்ள பிரபல ஹோட்டலொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது மதுஷ் உள்ளிட்ட 31 பேரும், ஹோட்டலுக்கு வெளியில் வைத்து 14 பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களின் சிறுநீர், இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளது.

இப்பரிசோதனையின் பின்னர் 6 பேர் சந்தேகநபர்கள் வடுவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏனைய 39 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன