பக்கங்கள்

பக்கங்கள்

1 மார்., 2019

விடுதலைப் புலிகள் குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் சர்ச்சை பேச்சு! தமிழர்கள் கொந்தளிப்பு!


இந்திய பாக்கித்தானுக்கு இடையே நிகழும் போர் சூழல் குறித்தும் இந்திய விமானி விடுதலை குறித்தும் இன்று பாக்கிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும்போது இம்ரான்கான் தமிழீழவிடுதலை புலிகள் குறித்து சர்ச்சை கருத்தை கக்கியுள்ளார்

.,அதாவது தீவிரவாதிகளில் இந்து தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் எனறும்,அது விடுதலைப்புலிகள் எனவும் , இந்தியாவில் அவர்களே தற்கொலை தாக்குதலை முதலில் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ள

அதேவேளை, தற்கொலை தாக்குதல்களை கோழைகளே நடத்துவார்கள் என்று கூறியுள்ளார் ,

இவரது கருது உலகத்தமிழர்களிடையே பெரும் அதிருப்தியை, ஆத்திரத்தையும் ஏற்படுத்தியதோடு உலக அரங்கில் வலுவான எதிர்வினை ஆற்றவும் தயாராகவும் தொடங்கியுள்ளனர் .

ஒரு விடுதலை போராட்ட இயக்கத்தை இவ்வளவு கீழ்த்தனமாகவும், ஒரு மதவாத இயக்கமாகவும் சித்தரித்துள்ளது ஆத்திரத்தை ஏட்படுத்தியுள்ளது, பல்வேறு உலகநாடுகள் விடுதலைப்புலிகளை தடை செய்திருந்தாலும் இவ்வாறு அவர்களின் கட்டமைப்பையும்,

ஒழுக்கத்தையும், தியாகத்தையும் இவ்வளவுக்கு கொச்சைப்படுத்தி பேசியது கிடையாது. எனவே உலகம் எங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் பாக்கித்தானுக்கு கண்டனங்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்!