பக்கங்கள்

பக்கங்கள்

5 பிப்., 2019

வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலத்திற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இன்று பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இதேவேளை வரவு செலவு திட்டத்திற்கான மூன்றாவது வாசிப்பு மீதான விவாதம் மார்ச் 13 ஆம் திகதி முதல் நடத்தப்பட்டு ஏப்ரல் 4 ஆம் திகதி அது தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது