பக்கங்கள்

பக்கங்கள்

8 பிப்., 2019

ஜனாதிபதி அனுப்பும் பெயர்களில் இருந்தே தகுதியானவர்கள் தெரிவு

ஜனாதிபதி அனுப்பும் பெயர்களிலிருந்து தகுதியானவர்கள் அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு செய்யப்படுவதாகவும்
தன்னிச்சையாக எந்தப் பெயரையும் அனுமதிப்பதில்லை எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர், தகுதியானவர்களை தெரிவு செய்கையில் எந்த வித அநீதியும் இழைக்கப்படவில்லை எனவும் சேவை மூப்பை மாத்திரம் அளவுகோலாகக் கருதி எவரும் தெரிவு செய்யப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புப் பேரவை தொடர்பில் ஜனாதிபதி சபையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் நேற்று விளக்கமளித்த அவர்:
அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கருத்தை முன்வைத்தேன்.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்க ளை நியமித்தல், உயர் பதவிகளுக்கு ஜனாதிபதி பரிந்துரைக்கும் பெயர்களை அனுமதித்தல் என்பவற்றில் அரசியலமைப்பு பேரவை பின்பற்றும் நெறி முறைகள் தொடர்பாக கடந்த 2016 டிசம்பர் 8 ஆம் திகதி சபையில் ஆற்றுப்படுத்தியிருந்தேன். இந்த நெறிமுறையை மீண்டும் நாளை (இன்று) சபையில் ஆற்றுப்படுத்த இருக்கிறேன்.
ஒவ்வொரு பதவிக்கும் நபர்களை நியமிக்கையில் நெறிமுறையை மட்டுன்றி அவரின் சேவை மூப்பு, நேர்மை, சுயாதீனம், பக்கச்சார்பின்மை என்பன குறித்தும் பேரவை கவனம் செலுத்துகிறது.
பேரவையில் ஐ.தே.கவை பிரதிநிதித்துவப் படுத்தி இரு உறுப்பினர்களும் ஐ.ம.சு.மு சார்பில் மூவரும் ஜே.வி.பி சார்பில் ஒருவரும் சிவில் சமூகத்தை
பிரதிநிதித்துவப்படுத்தி மூவரும் பேரவையில் அங்கம் வகிக்கின்றனர். அரசியலமைப்பு பேரவை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பில் தெளிவுபடுத்துவது அரசியலமைப்பு பேரவையின் பொறுப்பாகும்.