பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2019

விமான விபத்தில் 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது


எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 18 கனேடியர்கள் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தனது பயணத்தை ஆரம்பித்த 6வது நிமிடத்தில் வெடித்து சிதறியது.

இதில் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 157 பேர் உயிரிந்தனர். விபத்துக்குள்ளான குறித்த விமானத்தில் 35 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையிலேயே குறித்த விமானத்தில் பயணித்த 18 கனேடியர்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

18 கனேடியர்களில் Scarborough பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.