பக்கங்கள்

பக்கங்கள்

26 மார்., 2019

புங்குடுதீவு மடத்துவெளிக்கு 30 புதிய வீடுகள் அத்திவாரக்கல் நாட்டு விழா

எமது கிராமமான புங். வட்டாரம் -8 இல், 30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வீடமைப்பு அதிகாரசபையினூடாக புங்குதீவில் ஒரு வட்டாரத்துக்கு மட்டும் அதிகளவாக 30வீடுகள் கிடைக்கப்பெற்றமையானது வரலாற்று முக்கியத்தும் வாய்ந்து நிகழ்வாவே கருதவேண்டும்.
நீண்டகாலமாக வீடு வசதிகளின்றியும், மற்றவர்களின் வீடுகளிலும், தகரக்கொட்டில்களில் கடும் வெக்கையின் மத்தியில் வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்த 30வீடுகள் கிடகை்கப்பெற்றமையானது ஒரு வரபிரசாதமாகும் .
புங். வட்டாரம் -8 இல் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் கல்வீடுகள் வழங்கப்பட்டு புங்குடுதீவிலேயே எமது கிராமம் ஒரு முன்மாதிரியான கிராமமாக மிளிரப்போகின்றது
வீடமைப்பு அதிகாரசபையினூடாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாசா அவர்களால் வழங்கப்படும் இவ் வீடமைப்பு திட்டத்தை,
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிஞானம் சிறிதரன் அவர்கள் எமக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். அவருக்கு நாம் முதலில் நன்றி கூற கடமை கடமைபட்டுள்ளோம்
உண்மையிலேயே இவ்வீட்டுத் திட்டம் எமது கிராமமக்களுக்கு கிடைப்பதற்கு எமது பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சாந்தகுமார் யசோதினி அவர்களுக்குதான் நாம் மிகவும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
எமது கிராம மக்களின் சார்பாக சகோதரி யசோதினி அவர்களே இவ் வீட்டுத்திட்டதுக்கான கோரிக்கையை முன்வைத்து, அவரின் அதிதீவிர முயற்சியும், மனம்தளராத ஈடுபாடும் காரணமாகவே இவ் வீட்டுத்திட்டம் எமது கிராம மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
சகோதரி சாந்தகுமார் யசோதினி அவர்களுக்கு வாழ்த்துகளும்,மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்