பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2019

வைத்தியசாலையின் ஆவணங்களுக்கு தீ மூட்டி, 63 இலட்சம் ரூபா கொள்ளை


அநுராதபுர வைத்தியசாலையின் ஆவணங்களுக்கு தீ மூட்டிவிட்டு ,வைத்தியசாலையின் பணப்பெட்டியை உடைத்து 63 இலட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடப்பட்டு கொண்டிருந்த சிலர் குறித்த அரையினுள் புகை வருவதை அவதானித்து வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவினருக்கு தெரிவித்ததை தொடர்து பொலிஸார் சோதனையிட்ட போதே சில ஆவணங்கள் எறிக்கப்பட்டுள்ளதையும் , வைத்தியசாலையின் பணப்பெட்டி உடைக்கப்பட்டுள்ளதையும் அவதானித்துள்ளனர்.

இதுதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணிப்பாளர் வைத்தியர் துளான் சமரவீர தெரிவித்துள்ளதுடன் அநுராதபுர பொலிஸார் மேற்படி சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.