பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2019

வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; டென்மார்க்

மனித உரிமையை பாதுகாத்தல் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என டென்மார்க் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை தொடர்பாக இன்று தமது உத்தியோகப்பூர்வ அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள், குறித்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்தன. இதன்போதே டென்மார்க் பிரதிநிதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

30/1 பிரேரணையை நிறைவேற்றுவதற்கான காலஅட்டவணை ஒன்றிணை தயாரித்து முன்வைப்பது அவசியமானது எனவும் டென்மார்க் பிரிதிநிதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், யுத்த காலத்தில் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டென்மார்க் வலியுறுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டென்மார்க் அரசாங்கம் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.