பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2019

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கஜெனீவாவை சென்றடைந்தார் கருணாஸ்


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை, இனப்படுகொலை, சர்வதேச விசாரணை என்பனவற்றை வலியுறுத்துவதற்காக தமிழகத்தில் இருந்து சட்ட மன்ற உறுப்பினரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவருமான கருணாஸ் ஜெனீவாவை சென்றடைந்துள்ளார்.

அவருக்கு புலம்பெயர் தமிழின உணர்வாளர்களால் சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ம் நாள் தான் உரையாற்ற இருப்பதாக முன்னதாக ஊடகங்களில் தெரிவித்த கருணாஸ் அந்த உரையை 2013ம் ஆண்டு முன்னை நாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் கொண்டு வந்த ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.