பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2019

பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்

கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீதான வழக்கு விசாரணை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வின்போது பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ அவர்களை அச்சுறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

குறிப்பாக கழுத்தை அறுக்கும் வகையிலான சைகை காட்டப்பட்ட காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த விசாரணையின்போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த செயலானது இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமையுடன் தொடர்புடையதல்ல என வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் குறித்த விசாரணை இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றதில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.