பிரான்சில் இடம்பெற்ற செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வு இன்று 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை வில்நெவ் சென்ஜோர்ஜ் பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பவுஸ்ரின் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சுடர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர்