பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2019

கொள்கையை கரைத்துவிட்டு கரை ஒதுங்கினார் நாஞ்சில்

அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன் இனிமேல் இலக்கிய மேடைகளில் மட்டுமே முழங்குவேன். அரசியல் பேசினால் நாக்கை அறுத்துக் கொள்வேன் என்றெல்லாம் சபதம் எடுத்து சிறிது காலம் அமைதி காத்த நாஞ்சில் சம்பத், சபதத்தை கைவிட்டு மீண்டும் அரசியல் பிரச்சாரத்தில் களமிறங்குகிறார்.

தமிழ் சினிமாவில் நடிப்பில் தற்போது மும்முரமாக இயங்கிவரும் நாஞ்சில் சம்பத்முன்னதாக வைகோவுக்காக மட்டும் பிரச்சாரம் செய்வேன் என்றவர் இப்போ முற்று முழுதாக திமுக கூட்டணிக்கு கைகொடுக்க உள்ளார்,

திமுகவில் ஆரம்பித்த அரசியல் வாழ்க்கை பின்னர் மதிமுக, அதிமுக, அமமுக என தொடர்ந்த அரசியல் பயணம் இப்போது 26-ந்தேதி முதல் பிரச்சாரப் பயணத்தை திமுக மேடையில் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.