பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2019

வடமாகாணசபையில் மனோ கணேசனும் போட்டி

எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் வடகிழக்கில் ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணி என்பவை களமிறங்க ஆலோசித்துள்ளன.

தமிழரசு கட்சி கொழும்பில் தேர்தல் அரசியலில் ஈடுபட போவதாக பேசப்படுகின்ற நிலையில் கருத்து வெளியிட்டுள்ள மனோகணேசன் அகில இலங்கை தமிழரசு கட்சி வட-கிழக்குக்கு வெளியே உள்ள ஏழு மாகாணங்களில் எங்கு வேண்டுமானாலும் தேர்தல்களில் போட்டியிடலாம். இதை நான் வரவேற்கிறேன். முழு இலங்கையை தாய்நாடாக ஏற்றுக்கொண்டு, தமிழீழ நிலைப்பாட்டை எப்போது தமிழரசு கைவிட்டதோ, அப்போதிருந்து இந்த உரிமை அந்தக் கட்சிக்கு இயல்பாக இருக்கிறது.

இதுபற்றிய எனது இந்த கருத்தை இதற்கு முன்னமே பலமுறை நான் அறிவித்திருக்கின்றேன்.

ஜனநாயக கட்சி கிளைகளை யாரும் இந்த ஜனநாயக நாட்டில் எங்கும் அமைக்கலாம்.

நாமும் வட கிழக்கில் எமது கட்சி கிளைகளை அமைக்கலாம். அங்குள்ள பல்வேறு அமைப்புகளுடன் கூட்டாகவோ, தனித்தோ செயற்படலாம். இதுதான் ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஸ்கரா சகிதம் தனது வடக்கு விஜயத்தை மனோ கணேசன் ஆரம்பித்துள்ள போதும் குகவரதனின் வெளியேற்றம் பெரும் பின்னடைவினை தருமென எதிர்பார்க்கப்படுகின்றது.