பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2019

அனந்தி சசிதரனுக்கு ஐ.நா கூட்டத்தொடர்களில் அனுமதி மறுப்பு.?



2014 ஆம் ஆண்டு தொடக்கம் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஐ.நா கூட்டத்தொடர்களில் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமுமாகிய அனந்தி சசிதரன் இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவில்லை.


தற்போது சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் நிலையில், ஜெனிவா செல்வதற்கான அனுமதியை அமைச்சிடம் கோரிய போதிலும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டமையே இம்முறை அமர்வில் கலந்துகொள்ளாமைக்கான காரணம் என தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில், எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை தொடர்பிலான பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலெட்டினால் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கத்து.