பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2019

நீதிக்காய் எழுவோம் - மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி!


வ
16-03-2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ”நீதிக்காய் எழுவோம்” என்ற இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மாநகர சபை மைதானம் (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) நோக்கி நடைபெறவுள்ளது.
 இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விளக்கங்களும் விபரங்களும் பல்கலைக் கழக மாணவர்களாலும், பல்கலைக் கழக சமூகத்தினராலும் ஊடகங்களுடாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் முழுமையான ஆதரவினை வழங்குவதோடு பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பல்கலைக் கழக சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு பங்கேற்குமாறு வேண்டுகின்றோம்.
பல்கலைக் கழக ஊழியர் சங்கம்