பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2019

மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான மனு

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 02ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சத்ய கவேஷகயோ என்ற அமைப்பினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புவனேக அளுவிகாரே, எல்.டி.பி.தெஹிதெனிய மற்றும் ப்ரீதி பத்மன் சுரசேன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்கொன்று விசாரிக்கப்பட உள்ளதால் இந்த மனுவை ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி புவனேக அளுவிகாரே கூறியுள்ளார்.

பல மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதால் மக்களின் சர்வஜன வாக்குரிமை மீறப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது