பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2019

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு


3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார்.

சபாநாயகர் தனபாலை அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு, தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது