பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2019

கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்டர்போலின் அதிரடி

தெஹிவளை, பாணந்துறை சரிக்காமுல்ல, கொள்ளுப்பிட்டி , வத்தளை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்புக்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸ் விசாரணை நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளை நடத்தும் இலங்கை பொலிஸார் தற்கொலைதாரிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் குறித்த 5 வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
தெமட்டகொடையில் கைதுசெய்யப்பட்டுள்ள வர்த்தகர் மொஹம்மட் யூசுப் இப்ராஹிம் பொலிஸ்
விசாரணைகளில் பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாகவும் அதனடிப்படையில் சில இடங்களுக்கு சென்ற பொலிஸார் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்ரபோல் ,எப்.பி ஐ ,ஸ்கொட்லன்ட்யார்ட் உட்பட்ட பல உயர்மட்ட வெளிநாட்டு பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் விசாரணைக்காக இலங்கை வந்துள்ளன.
தாக்குதல் சம்பவங்கள் மேலும் நடக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதுவரை 70 பேர் குண்டுவெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் இப்ரபஹிம் தனது மகன்மாரின் செயற்பாடுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ஆரம்பத்தில் கூறியபோதும் அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளில் பல முக்கிய தகவல்களை பொலிஸ் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்ராஹிமின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது