பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2019

யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியிலே சோதனை சாவடி



யாழ்.மாவட்டத்தில் சில பகுதிகளில் காவல் துறை சோதனை சாவடி அமைக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியான ஐந்து சந்திப் பகுதியிலேயே மேற்படி சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் வீதியோரமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் பெருமளவான காவல் துறை நிறுத்திவைக்கப்பட்டு இச் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

யாழ்.நகரத்திற்குள் உட்செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் காவல் துறை வாகனத்திற்குள் தீவிர சோதனையினை மேற்கொள்வதுடன், வாகனத்தின் ஆவணங்கள் தொடர்பாகவும் சோதனை இடுகின்றனர்