பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2019

தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி

தந்தை செல்வாவின் நினைவு தினமும், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத்
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குமான நினைவேந்தலும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் குறித்த நிகழ்வு  இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டது.
இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டோர், தந்தை செல்வாவின் சதுக்கத்திலுள்ள சமாதிக்கு மேல், மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியதுடன் தீவிரவாத தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக தீபங்களை ஏற்றி, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் ஆகியோருடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சி பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.