பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2019

கொழும்பு வீதிகள் திடீர் திடீரென ஏன் மூடப்படுகின்றன? பொலிஸ் பேச்சாளர் விளக்கம்!

கொழும்பில் திடீர் திடீரென வீதிகள் மூடப்பட்டு சோதனைகள் இடம்பெறுவது மக்களின் பாதுகாப்பினைக்
கருத்திற்கொண்டே என சிறிலங்கா பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றப்படவோ வேண்டாம் என அவர் மக்களைக் கேட்டுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றின் செய்திச் சேவைக்கு வழங்கிய தகவலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், சோதனை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் அவ்வப்போது இடம்பெற்றுவருவதால் அனைத்துப் பொதுமக்களையும் அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கிமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.