பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2019

பெண் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி விகாரைகளில் தாக்குதல் நடத்த திட்டம்

பெண் தற்கொலைக் குண்டுதாரிகளைப் பயன்படுத்தி, பௌத்த விகாரைகளில் தாக்குதல் நடத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்
அமைப்பு திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
சாய்ந்தமருதில் குண்டுவெடித்த வீட்டில் இருந்து வெள்ளை நிறத்திலான பாவாடை மற்றும் சட்டைகளை (skirts and blouses) புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறான உடைகள், பெரும்பாலும் பௌத்த ஆலயங்களுக்கு பெண்கள் அணிந்து செல்வது வழக்கம். முஸ்லிம் பெண்கள் இத்தகைய ஆடைகளை அணிவதில்லை.
கிரியுல்லவில் உள்ள ஆடையகம் ஒன்றில், இத்தகைய ஒன்பது ஆடைத்தொகுதிகளை 29 ஆயிரம் ரூபாவுக்கு, கடந்த மார்ச் 29ஆம் நாள் முஸ்லிம் பெண்கள் கொள்வனவு செய்துள்ளனர்.
இவற்றில் 5 தொகுதி ஆடைகள் மாத்திரம் சாய்ந்தமருதுவில் உள்ள மறைவிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏனைய ஆடைகளை தேடும் முயற்சியில் புலனாய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.
பௌத்த பெண்களைப் போன்று இந்த ஆடைகளுடன் தற்கொலைக் குண்டுதாரிகளை பௌத்த விகாரைகளுக்கு அனுப்பி வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.