பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2019

போரா 12 வகை துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போரா 12 வகை துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் மீகஹதென்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) இரவு 8.35 மணி அளவில் மீகஹதென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து முச்சக்கரவண்டி வரை சோதனையிட்டபோது வெளிநாட்டு துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான 4 தோட்டாக்களுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.