பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2019

னங்களும் மதங்களும் சமமாக நடத்தப்படவேண்டும்! திங்கள் மே 27, 2019

நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்றால் அனைத்து இனங்களும் மதங்களும் சமமாக நடத்தப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

குருநகர் சென்ஜேம்ஸ் விளையாட்டு மைதானத்துக்கான மின்னொளி பொருத்துவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (27) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் சர்வதேச விசாரணையாளர்களை இலங்கைக்குள் விடமாட்டோம் எனக் கூறிய ஜனாதிபதி மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள், இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் காரணமான சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் உளவுப் பிரிவினர் இலங்கைக்கு வந்து இங்கு நடக்கின்ற விடையங்களை ஆராய்ந்து வருகின்றார்கள்.

சர்வதேச நாடுகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள வேளையில் இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் முறையாகப் பயன்படுத்தி எங்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடைத்தை அடைவதற்கு துரிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைப் போன்று இனியொரு தாக்குதலும் இடம்பெறக்கூடாது நாங்கள் 60 வருட காலமாக இனப்பிரச்சினை தீர்வுக்காக ஆயுத ரீதியிலும் ஜனநாயக ரீதியிலும் போராடி வருகின்றோம். எங்களுக்கு யுத்தத்தின் வலிகள் தெரியும் எங்களுடைய மக்களின் விடுதலைக்காகப் பல இலட்சம் மக்களை இழந்திருக்கின்றோம்.



இன்றைய சூழலில் பௌத்த ஆக்கிரமிப்புக்களும் இராணுவ பிரசன்னமும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமைகள் தொடர்பாகப் நாடாளுமன்றத்திலும் நாங்கள் பேசி வருகின்றோம்.

இவ்வாறிருந்தும் எங்களுக்கான தீர்வு கிடைக்காத நிலையில் பல்வேறு வழிவகைகளில் எங்களுடைய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம் இந்த நாடு பாதுகாக்கப்படவேண்டும் என்றால் இங்குள்ள அனைத்து இனங்களும், மதங்களும் சமமாக நடத்தப்படவேண்டும்.

இதில் குறிப்பாக அனைத்து சிறுபான்மை இனங்களும் ஒன்றுபட்டுச் செயலாற்றவேண்டும் நீண்டகாலமாகப் போராடி வருகின்ற எங்களுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கவேண்டும்.

இதற்காகவே நாங்கள் தொடர்ந்தும் முயன்று வருகின்றோம். என்றார்