பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2019

கற்றல் செயற்பாடுகளைப் புறக்கணிக்கவுள்ளது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இன்று முதல் கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த ஒன்றியத்தால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனரின் வழக்கு விசாரணைகளை நிறைவுறுத்தல் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கற்றல் செயற்பாடு புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது.

இந்த கற்றல் செயற்பாடு புறக்கணிப்புக்கு ஏதேனும் ஒரு வழியில் தடை ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அது பாரிய போராட்டமாக முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ள