பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2019

பானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறி உள்ளது -சென்னை வானிலை மையம்

பானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறி உள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறி உள்ளார்.

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறி உள்ளது. சென்னைக்கு வடகிழக்கே 420 கிமீ தூரத்தில் மையம் கொண்டு உள்ளது. ஒடிசாவின் பூரி பகுதியில் நாளை மறுதினம் புயல் கரையை கடக்கும். பானி புயல் காரண்மாக வடங்க கடலில் பலத்த காற்று வீசக்கூடும்.


மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். மே 3-ந் தேதி வரை செல்ல வேண்டாம்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



இவ்வாறு அவர் கூறினார்.