பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2019

யாழ்.நகரினுள் வாகனங்கள் நுழையத்தடை?


யாழ்.மாநகர முதல்வரும் புதிய அறிவிப்புக்களை விடுக்கத்தொடங்கியுள்ளார்.

இதன் பிரகாரம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி மாநகர எல்லைப் பகுதிக்குள் பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும் விடுகை நேரமும் வாகனங்கள் நுழைவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவதாக மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் பாடசாலை நாட்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் மாநகர எல்லைப் பகுதிக்குள் பார ஊர்திகள் , கண்டர்கள் , டிப்பர்கள் , இரு சக்கர உழவு இயந்திரங்கள் , சுற்றுலாப் பேரூந்துகள் , வடி வகை வாகனங்கள் எவையும் உட் பிரவேசிக்கவோ அல்லது வீதியோரம் நிறுத்தி வைப்பதற்கோ தடை விதிக்கப்படுகின்றது.