பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2019

சிலாபத்தில் பதற்ற நிலை! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்! உடன் வரும் வகையில் ஊடரங்கு சட்டம் அமுல்

சிலாப பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்ப
ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் நகர பகுதியில் மாத்திரம் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக வெளியான செய்தி அடுத்து ஒன்று கூடிய இளைஞர்களால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
பொலிஸ் நிலையம் அருகே வந்த இளைஞர், தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை நிலைய தெரியப்படுத்துமாறு பொலிஸாரிடம் கேட்டுள்ளனர்.
இதனால் அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கடைகள் அனைத்தும் நகரத்தில் மூடப்பட்டன