பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2019

சந்தேகநபர்கள் இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது

“குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மாத்திரமே இன்னமும் கைது செய்யப்படவில்லை. இதற்கு காரணம் அவர்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளமையே ஆகும்.

ஆனாலும் அவர்களை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

இவ்விடயத்தில் பாதுகாப்புத்துறையும் மிகவும் அவதானத்துடன் செயலாற்றி வருகின்றது.

மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துதவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகியவுடன் யார் பொறுப்பு கூறவேண்டியவர் என்பது பற்றியும் அனைவரும் அறிந்துக்கொள்ள முடியும்.

அந்தவகையில் குறித்த அறிக்கை வெளியாகும் வரை அனைத்து அரசியல்வாதிகளும் நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே ஆகும்” என நளின் பண்டார தெரிவித்துள்ளார்