பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2019

அளுத்கமயில் ‘வட்ஷ்அப்’ குழுவையை உருவாக்கிய மூவர் கைது.

“தர்காடவுன்பிரேக்கிங்நியுஸ்“ என்றபெயரில்100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப்குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கம பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 20, 23 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்தகுழுவுடன்தொடர்புடையமேலும்25 பேர் இன்று அக்குழுவிலிருந்து உடனடியாக விலகியிருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த3 வருடங்களாக இந்த வட்ஸ்அப்குழு செயற்படுத்தப்பட்டுவருவதுடன், இந்தக் குழுவை உருவாக்கியவர் பலவருடங்களாக வெளிநாட்டில் கடமையாற்றி நாடுதிரும்பியவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் 3 நாள்கள் தடுத்து வைத்து, விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்