பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2019

கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தேடுதல் வேட்டை!

ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும்
, காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா காவல்துறையினருடன், 3000 இற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்கா இராணுவ பதில் பேச்சாளர் மேஜர் ஜெனரல் றொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்