பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2019

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இன்று டெல்லி பயணம்

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இன்று டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்லும் அவர்கள் பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர்.


சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில், பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. அந்த கூட்டணியில் அ.தி.மு.க.வும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) காலை 9.55 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.


அங்கு பா.ஜ.க. தலைவர்களை இருவரும் சந்தித்து பேச உள்ளனர். பின்னர் இவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு எப்போது திரும்புகிறார்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.