பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2019

மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்-தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள மிருக காட்சி சாலையில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன.

அவற்றில் 14 சிங்கங்கள் அங்கிருந்து திடீரென மாயமாகிவிட்டன. அவை அங்கிருந்து தப்பி வெளியேறி விட்டதாக பூங்கா அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அவை தேசிய பூங்கா அருகேயுள்ள பலாபோர்வா நகரில் உள்ள போஸ்கோர் பாஸ்பேட் சுரங்கம் பகுதியில் சுற்றி திரிகின்றன. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தப்பி ஓடிய சிங்கங்களை பிடிக்க ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்