பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூன், 2019

கம்பஹாவில் விசேட சுற்றிவளைப்பு 155 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

36 காவல்துறை நிலையங்களை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர்களினால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுக்காக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 93 சந்தேகநபர்களும், ஏனைய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 62 பேரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.