பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2019

மூன்று மாணவர்கள் பலியானதால் ஏ-9 வீதிக்கு பூட்டு!

கெக்கிராவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். கெக்கிராவ- கொரபாகல- திப்பட்டுவாவேயில் நடந்த இந்த விபத்தை அடுத்து, ஏ-9 வீதியை வழிமறித்து பிரதேசவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புளையில் இருந்து அநுராதபுரம் நோக்கி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பாதையை விட்டு விலகி, வீதி ஓரத்தில் மேலதிக வகுப்புகளுக்காக சென்ற நான்கு மாணவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவன் ஒருவர் பலத்தகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தப்பிச் சென்ற லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்