பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூன், 2019

பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் யார் யார் தெரியுமா

ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் இன்று தங்களது ஆளுநர் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

இந்த நிலையில் முஸ்லிம் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அனை வரும் இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இந்தநிலையில் பதவிகளை இராஜினாமா செய்தவர்கள் யார் யார் தெரியுமா?

அமைச்சர்களான

ரவூப் ஹக்கீம்,
ரிஷாத் பதியுதீன்,
கபீர் ஹாஷிம்,
எம்எச்..ஏ ஹலீம்,
இராஜாங்க அமைச்சர்களான

அலி சாஹிர் மௌலானா,
பைசர் காசிம்,
எச். எம்.எம். ஹரீஸ்,
எம்.எஸ்.எம் அமீர் அலி,
பிரதியமைச்சர்களான

அப்துல்லாஹ் மஹ்ரூப்
ஆகியோரே தங்கள் அமைச்சுப் பதவிகளை இராஜினாமச் செய்துள்ளனர்.