பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூன், 2019

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தனது எதிர்கால அரசியல் பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இணைந்து முன்னெடுத்து செல்லவுள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான எஸ். சதாசிவம் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் பொது தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்