பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2019

வீட்டுக்குள் புகுந்து மாணவனுக்கு வாள்வெட்டு! - நவாலியில் பயங்கரம்

யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து மாணவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவாலி - சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் நேற்று இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து மாணவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவாலி - சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் நேற்று இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், 16 வயதுடைய மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளது. படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்களுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.